மாத்திரை தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாப மரணம்

பனடோல் மாத்திரை தொண்டையில் சிக்கியதால் குழந்தை ஒன்று மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அச்சுவேலியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருபாகரன் அருண் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

 
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குழந்தைக்குத் தாய் பனடோல் கொடுத்து தண்ணி பருக்கியுள்ளார். ஆனால் பனடோல் தொண்டையில் சிக்கியதையடுத்துச் குழந்தைக்கு மூச்சுத் திணறி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாகக் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் குழந்தை அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 
 
உடல் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.