மாவிலை தோரணங்கள் கட்டுவதின் அறிவியல் பூர்வ காரணம்

மாவிலை தோரணங்கள் கட்டுவதின் அறிவியல் பூர்வ காரணம்

மாவிலை தோரணம் மங்களத்தின் சின்னம், சுப காரியத்தின் அடையாளம். மாவிலை தோரணத்தை காணும் போதே நம்மனதிற்குள் ஒரு அதீத சந்தோசம் எட்டிப்பார்பதை நம்மால் உணராமல் இருக்க முடியாது.

பச்சை பசேலென்று மாவிலையை அழகாய் ஒவ்வொன்றாய் கோர்த்து அதை தோரணமாய் கட்டி நம் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கபோவதை வாசலிலேயே அனைவருக்கும் அறிவிக்கும் ஒரு ஆனந்த அழைப்பிதழ்.

ஆனால் எத்தனை பேருக்கு மாவிலை தோரணங்கள் கட்டுவதின் அறிவியல் பூர்வ காரணம் தெரியும்?

பொதுவாகவே இலைகள் பகலில் பிராண வாயுவான ஆக்சிஜனை அதிக அளவில் வெளிடுவதையும் இரவில் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளிடுவதையும் பற்றி அனைவரும் அறிந்திருப்போம்.இச்செயல் அவை மரத்திலோ அல்லது செடியிலோ உள்ளவரை மட்டும் தான்.

ஆனால் மாவிலைக்கு மட்டும் தான் அவை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் தன்னுள் அடக்கி இருக்கும் ஆக்சிஜனை வெளியிடும் குணம் இருக்கிறது .

இதற்கும் நமது தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

உண்டு நம் வீட்டு விசேஷங்கள் யாவும் சுற்றமும் நட்பும் புடை சூழ நடதப்படுவாதால் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த காலத்தில் பெரும்பாலும் இல்லங்களிலேயே விசேஷங்கள் நடத்தப்பட்டன .மேலும் இந்தக்காலத்தை போல் அல்லாமல் முன்பெல்லாம் வீடுகள் அளவில் சிறியவையாக இருந்தன. கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் மூச்சிலிருந்து வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு போதுமான பிராண வாயு கிடைக்க சிரமமிருக்கும்.

இதை தவிர்ப்பதற்காகத்தான் அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் ஆக்சிஜனை வெளியிடும் ஆபத்பாந்தவனாகிய மாவிலையை தோரணங்களாக மக்கள் கூடும் இடங்களாகிய வீட்டு விசேஷங்களிலும், கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்சிகளின் போதும் கட்டும் வழக்கத்தை ஏற்படுத்தினர்