மீசாலையில் கடை தீயில் எரிந்து நாசம்!

மீசாலையில் கடை தீயில் எரிந்து நாசம்!

யாழ்.மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின.

 

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின் வயர்களும், தொலைபேசி வயர்களும் எரிந்து சேதமடைந்தன. இதனால் மீசாலை அல்லாரைப் பகுதிகளுக்கான மின் விநியோகமும் பளை மருதங்கேணி போன்ற இடங்களுக்கான தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

அதிகாலை திடீரென சத்தம் கேட்டதால் பக்கத்துக் கடைக்குள் படுத்திருருந்த சிப்பந்திகள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸார் யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் தீயை அணைத்து தீ பக்கத்து கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்

சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.