மீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..!

மீன ராசிக்காரர்களே  மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..!

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும்.

உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும் சுகவாழ்வு சொகுசுவாழ்வு சற்று பாதிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வதன் மூலம் தேக்கநிலை ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.

திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாவதோடு உற்றார் உறவினர்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் ஏற்படும். திருக்கணிதப்படி தை மாதம் 10-ஆம் தேதி (24-01-2020) ஏற்படவுள்ள சனிமாற்றத்தின் மூலம் சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு கை கால் அசதி போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும்.


குடும்பம் பொருளாதாரநிலை
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடைய முடியும்.


  

உத்தியோகம்
பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றல் உண்டாகும். எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக விலகும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

தொழில் வியாபாரம்
தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயத்தையும் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.


கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். சில நேரங்களில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.

அரசியல்
கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலையில் சரளமான நிலை இருப்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவினைப் பெற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெற்று விடுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் மண வழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்-  மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொருளாதாரம் உயரும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

    ஆன்மீக செய்திகள்            14.042019

ஆன்மீகச்செய்திகள்

யாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்

யாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா  புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக விநாயகர்   பஞ்சகுண்டபக்ஷ  நூதன பிரதிஷ்டா  மஹா கும்பாபிஷேகம் நாளை...

இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...

நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

யாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019

இன்றைய ராசி பலன் 24.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.   இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...

கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...

இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்!

வெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...

யாழில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவன் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்...

வவுனியாவில் கோர விபத்து! பரிதாபமாக பலியான இளைஞன்

வவுனியாவில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.வவுனியா, கற்பகபுரம் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.அதே...

மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல், லங்கா ஐ.ஓ. சி நிறுவனத்தின் பெற்றோல் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று(10)நள்ளிரவு முதல் கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது. இதற்கமைய...

யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு

யாழ்.மூளாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் 11 பவுண் நகையை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூளாய் கூட்டறவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த வீட்டினுள் கடந்த திங்கட்கிழமை இரவு உட்புகுந்த திருடர்கள் வீட்டினுள் சல்லடை போட்டு தேடி 11 பவுண் நகைகளை திருடியுள்ளனர். பின்னர்...

யாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்!

சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது - 33) என்பவரே இந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

1 | 2 | 3 | 4 | 5 >>