முல்லைத்தீவு.புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி சிறுமி மரணம்! தாய் படுகாயம்

முல்லைத்தீவு.புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி சிறுமி மரணம்! தாய் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், தாய் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தமிழரசன் உதயகுமாரி (வயது 06)  என்ற சிறுமியே இவ்வாறு மின்னல் தாக்கி மரணமடைந்தவராவார்.

இவரது தாயாரான தமிழரசன் சுபாஜினி படுகாயமடைந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் தாக்கத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த மேற்படி தாய் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

அதேவேளை, இச்சம்பவத்தில் மரணமடைந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.