முல்லைத்தீவு மண்ணில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை

முல்லைத்தீவு மண்ணில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை

வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னரான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
தமிழர்களது வரலாற்று பாரம்பரியத்தை கட்டிக்காக்க வேண்டியது எங்கள் அனைவரது பாரிய பொறுப்பாகும். வரலாறுகளை நாம் எமது தந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதற்கமைய வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
இம் மக்களுடைய கோரிக்கைக்கு அமைய பண்டாரவன்னியனின் இராச்சியங்களில் ஒன்றாக விளங்கிய முல்லைத்தீவு நகரில் மன்னனுக்கு சிலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த அனுமதி கிடைத்த பின்னர் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் கம்பீரமான சிலை அமைக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேலும் தெரிவித்தார்.