மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் திரு காணா நகீரதன்

மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் திரு காணா நகீரதன்

லண்டன் பிரென்ட் பகுதியின் 2014-2015 வருடத்திற்கான மேயராக திரு காணா நகீரதன் அவர்கள் அறுபதிற்க்கு மேலான  நகரசபை பிரதிநிதிகளால்  இன்று 04-06-2014 தெரிவு செய்யப்பட்டு புதிய மேயர் ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

 

இந்நிகழ்வில் திரு காணா நகீரதன் கடந்த காலங்களில் அவர் நகரசபை பிரதிநிதியாக இருந்தபோது ஆற்றிய சேவைகளை அனைவரும் பாராட்டி மேயருக்கு  தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 

இவ்வரலாற்றில் பதிவாகும் நிகழ்வில் சிறுப்பிட்டி பூமகள் நற்பணி மன்ற அங்கத்தவர்களும் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.மேயர் நகீரதனின் பாரியார் ரேவதி அவர்கள்  பூமகள் நற்பணி மன்றத்தின் உபதலைவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது.

இவருக்கு சிறுப்பிட்டி இன்போ தனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது.