மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி

மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்கும் வழி

பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாக மிருதுவாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் உரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும்.

சிலர் இதனை கவனிக்காமல் விட்டாலும் பல பெண்கள் இதனை நீக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு தான் செல்கின்றார்கள். ஆனால் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும். அதற்கான வழிமுறையினை நாங்கள் தருகின்றோம்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் சேகரித்து கொள்ளவும். இலைகளை காயவைத்து எடுத்து பின்னர் இவற்றை மா போல் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தூளை படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசிக்கொண்டு படுக்கவும்.

இந்த கலவையினை தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதட்டின் மேல் பாகம் பளிச்சிடும்.