யாழ்.காரைநகரில் ஒரு மனிதரின் மனிதாபிமானம் மிக்க நடவடிக்கை

 யாழ்.காரைநகரில் ஒரு மனிதரின் மனிதாபிமானம் மிக்க நடவடிக்கை

கடந்த மாதங்களாக போதிய மழை இல்லாததும், குளங்கள் மற்றும் நீர் ஒடைகளில் தண்ணீர் காணப்படாமையாலும் பலபகுதி கடும் வறட்சி பகுதியாக மாற்றிவிட்டது.

நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தை நோக்கி சென்றுவிட்டதால், சில பிரதேசங்களில் உள்ள பெரும்பாலன கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய்களில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. குளங்கள்  அனைத்தும் வறண்டு போனதால் கால்நடைகளுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை.

இது தவிர பெரும்கனுதிகளில் மக்களுக்கே குடிப்பதற்கு குடிநீர் இல்லை.

இவ்வறானதொரு சூழ்நிலை கொண்ட பகுதியே கரைநகர் பிரதேசமாகும். அங்கு காரைநகர் பயிரிக்கூடல் என்ற இடத்தில், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக மனிதாபிமானம்மிக்க ஒருவர் தனது வீட்டிற்கு முன்னால் தண்ணீர்த்தொட்டி அமைத்துள்ளார். இதனால் கால்நடைகள் சென்று அங்கு நீர் பருகி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இவ்வாறான மனிதபிமான செயல்கள் அருகி வரும் நிலையில் தற்போது இவ்வாறானவா்கள் இருப்பதால் மழை வருவதற்கு இது ஒரு சான்றாகும். இதே வேளை தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமை காரணமாக குடிநீர் பிரச்சனை தொடர்பாக வடமாகாண சபை எந்தளவு அக்கறை கொண்டுள்ளது என்பது கேள்விக்குரிய விடயமே ஆகும்.

குறித்த பிரதேசத்தில் காரைநகர் பிரதேசசபை எந்தவொரு இவ்வாறானதொரு முயற்சியை எடுக்கமால் இருப்பது வருந்த தக்க விடயமே ஆகும். ஆனால் வரி வசூலிப்பதில் இவா்கள் தான் ஏனைய பிரதேச சபையை விட கெட்டிக் காரர்கள் ஆகும்.. யாழ்ப்பாணத்தில் தற்போது மழை பெய்திருந்தாலும் வறட்சியின் தாக்கம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது