யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி பயணிக்கும் ரயில் சேவையே யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.
அதேபோல காலை 5.45 மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ரயில் சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அனுப்ப திட்டமிடப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி இரு சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில், நேரமாற்றங்கள் மேற்கொண்டதன் பின்னர், புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 4003 மற்றும் 4004 ரயில்களே புதிய ரயில் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்பிரகாரம் தினமும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும்மிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் 7 ஆக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் 01.09.2019