யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் வத்தளைப்பகுதியில் தீ

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ்  வத்தளைப்பகுதியில் தீ

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பஸ் இன்று  அதிகாலை வத்தளைப்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது.

 

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து பஸ்ஸிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் 36 பயணிகள் இருந்தனர் என்றும் அவர்கள் எவருக்கும் ஆபத்து ஏற்றபடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.