யாழில் இன்று ஆரம்பமாகிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

யாழில் இன்று ஆரம்பமாகிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

ஆறாவது சர்வதேச வர்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கண்காட்சி நடைபெறும் மாநகரசபை மைதானத்திற்கு விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டனர்.

யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றம் மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கைக் கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இன்று ஆரம்மாகிய இந்தக் கண்காட்சி தொடர்ந்து 3 தினங்கள் இடம்பெறும்.