யாழில் இன்று புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி(படங்கள்)

யாழில் இன்று புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி(படங்கள்)

 யாழில்.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 'புகை சுகத்தின் பகை,புகைத்தலில் செலவிடுதலை உன் பிள்ளையின் படிப்பில் முதலிடு ' போன்ற பதாகைகளைத் தாங்கியவாறு இந்த விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.   இன்று காலை 8மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மு.ப 11மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்பத்தில் நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வுப் பேரணியை யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையுடன் இணைந்து யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவு,யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் மற்றும் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்தே இந்த புகையிலை விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.