யாழில் இருகுழுக்களுக்கிடையில் மோதல் நால்வர் காயம்

யாழில் இருகுழுக்களுக்கிடையில் மோதல் நால்வர் காயம்

யாழ் துன்னாலைப்பகுதியில் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் நால்வர் காயடைந்துள்ளார்கள்.

யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக் களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாய மடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சோ்க்கப்பட்டுள்ளார்கள்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.