யாழில் இளைஞனுக்கு யோகாசனத் திலகம் பட்டம்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கோடைத்திருவிழா நிகழ்வில் இளம் யோகாப் போதனாசிரியர் எஸ்.உமாசுதன் யோகாசனத்திலகம் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக யோகாசனம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் நல்லூர் ஆலயச் சூழலில் 05 வருடங்களுக்கும் மேலாக இடைவிடாது இப் பணியைச் செய்து வருகிறார்.

யாழ்.பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறையிலும் யோகப் பணியை மேற்கொண்டவர்.

தற்போது யாழ்.யோக அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கி யாழ்ப்பாணத்தின் யோகபாரம்பரியத்தை வளர்ப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.