யாழில் எதிர்வரும் 31. புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

  யாழில் எதிர்வரும் 31. புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

 'புகையிலை ஒழிப்பு' எனும் தொனிப் பொருளில் மாபெரும் பேரணி ஒன்றினை யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் மருத்துவ விஞ்ஞானப் பிரிவும் யாழ்.பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ துறையுடன் இணைந்து எதிர்வரும் 31 திகதி அன்று நடாத்த உள்ளது.

 

 
இப் பேரணியானது சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தில் சகலரதும் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் நிறைவு பெறும் என யாழ்.மருத்துவ சங்க செயலாளர் வைத்தியகலாநிதி சுரேந்திரகுமார் தெரிவித்தார்