பண்டைத் தமிழரும் அயலகத் தொடர்புகளும்' கருத்துரையும் கலந்துரையாடலும்

பண்டைத் தமிழரும் அயலகத் தொடர்புகளும்' கருத்துரையும் கலந்துரையாடலும்

யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 'பண்டைத் தமிழரின் அயலகத் தொடர்புகள்' என்னும் தலைப்பில் கருத்துரையும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை 4.00 மணிக்கு, இல 286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

 
இதன்போது கருத்துரையை தமிழ் நாடு, செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வாளர் முனைவர் 
ஜெ.அரங்கராஜ் வழங்குவார். 
 
 இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்
 விடுத்துள்ளனர்