யாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

யாழில்  பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார்.

இந்நிலையில் அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என்றும் இருவரும் அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 10 அலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த 18 அலைபேசிகளை திருடிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராக்களை ஆராய்ந்தபோது முகத்தினை துணியால் மூடிக் கட்டியபடி திருடர்கள் உள்நுழைந்தமை தெரியவந்தது.

அத்துடன் திருடன் ஒருவன் அங்கிருந்து வெளியேறும் சமயம் கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறு ஓர் துணியினால் தாம் கையாண்ட பொருள்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்தமை சிசிரிவி பதிவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் 11.09.2019

செய்திகள்

கொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...

மழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு

யாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...

யாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...

பாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...

சமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்

சமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...

யாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்

தமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் .     பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...

யாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்

கொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...

நல்லூரிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

யாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019

இன்றைய ராசி பலன் 24.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.   இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...

ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். "அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

வெளிநாட்டுச்செய்திகள்

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது

உலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...

வெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்

சுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

1 | 2 | 3 | 4 | 5 >>