யாழில் பார்த்தீனியம் வளர்ச்சி. நில உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

 யாழில் பார்த்தீனியம் வளர்ச்சி.  நில உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில்  விளை நிலங்களிலோ அல்லது வீட்டு வளவுகளிலோ பார்த்தீனியம் காணப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் க.சிறிபாதசுந்தரம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி  பார்த்தீனியம் வீட்டு வளவு மற்றும் விளைநிலங்களில் காணப்பட்டால் எவ்விதமான மன்னிப்பும் இன்றி உரிமையாளர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

 


மேலும் இவ்வாறு பார்த்தீனியம் உள்ள நில உரிமையாளர்கள் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் இவற்றை அழித்துவிடல் வேண்டும் இல்லையேல் 2015ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் சட்டவிதிக்கு அமைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிமன்றத்தின் நடவடிக்கை மூலம் 6 மாத சிறை தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் வழங்கப்படும்.

எனவே  பொதுமக்கள் இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்து தங்களையும் தங்கள் நிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.