யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கெதிராக அபராதம்

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய  சாரதிகளுக்கெதிராக  அபராதம்

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மூன்று வாகனச் சாரதிகளை 14 ஆயிரம் ரூபா அபராதமாகச் செலுத்துமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

சுன்னாகம் போக்குவரத்துப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன் போது காப்புறுதிப் பத்திரம் மற்றும் வரிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய வாகனச் சாரதிக்கு 6000 ரூபாவும், காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய வாகனச் சாரதிக்கு 5000 ரூபாவும், தெளிவில்லா சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 3000 ரூபாவும் அபராதமாக விதித்து நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது