யாழில் போதைப்பொருள் பாவனை தொடா்பில் இறுக்கமான நடவடிக்கைகள்

யாழில் போதைப்பொருள் பாவனை தொடா்பில் இறுக்கமான நடவடிக்கைகள்

யாழ். மாவட்டத்தில் மதுப்பாவனை மற்றும் புகைப்பொருள்களின் பாவனை அதிகரித்துள்ளதால் சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. எனவே இறுக்கமான சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் வர்த்தகர்கள் மற்றும் பொலிஸார் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்களையும் இணைத்து விசேட குழு ஒன்றினை கடந்த யூன் மாதம் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த குழுவினர் விழிப்புணர்வுகளை சமூகத்தில் வழங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில் மது மற்றும் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்தாத விடத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுவர் என்று எச்சரித்துள்ளது.

அத்துடன் பாவனைக்கு அனுமதி வழங்க முடியாது. எனினும் விற்பனை செய்யும்  வர்த்தக நிலையங்கள் தனியான இடங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும்  வர்த்தகர்களைக் கோரியுள்ளனர்.

மேலும் புகைப்பொருட்கள் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்க கூடாதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தீபாவளி தினத்தில் இருந்து மது மற்றும் புகைத்தல் பாவனை தொடர்பிலும் விற்பனை தொடர்பிலும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர் -