யாழ்.நகரப் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி

யாழ்.நகரப் பகுதியில்  முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஓட்டோ – தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகினர்.

பிரதான வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் இணையும் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த நிஷாந்த சுபசிங்க (வயது 32), கண்டியை சேர்ந்த றொசாந்த ஜனக பண்டார (வயது 35) ஆகியோரே மரணமாகினர்.

குறுக்குத் தெருவில் இருந்து பிரதான வீதியைக் கடந்த ஓட்டோவை யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது.

இதனால் ஓட்டோவை செலுத்தியவரும் பின்னிருக்கையில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் ‘மஹா’ நிறுவனத்தில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.