யாழில் வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் மரணங்கள்

யாழில் வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் மரணங்கள்
யாழில் வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள்  அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினர் கவலை வெளியிட்டனர்.
 
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்
 
அவர்கள் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து 2014.11.19 வரையான காலப்பகுதியில் விபத்தின் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகரித்துக் கொண்டு போவதை காட்டுகிறது.
 
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துக்கள் அதிகளவானவை மோட்டார் சைக்கிள் மூலமே இடம்பெறுகிறது. ஒரு வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
அளவுக்கு அதிகமாக மோட்டார் சைக்கிள்களை சொலுத்தும் இளைஞர்களே வீதி விபத்துக்களை சந்திக்கின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
இந்த விபத்துக்களுக்கு அதிகளவான காரணம் வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசி பாவனையே எனவே வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசி பானையினை நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
 
வைத்திய சாலையின் விபத்து பிரிவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 8 பேர் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதன் காரணமாக வைத்தியசாலையில் இடப்பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
 
தெற்கில் வீதி விபத்துக்கள் குறைத்து வரும் நிலையில் வடக்கில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது என  யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 
இதேவேளை கடந்த 2014.01.01 தொடக்கம் 2014.10.31 வரையான காலப்பகுதியில் போக்குவரத்து சிறு குற்றங்கள் 8228 இடம்பெற்றுள்ளது. இதில் போக்குவரத்து சட்டங்களை மீறியமை தொடர்பான குற்றங்களே அதிகளவு பதிவாகியுள்ளது.
 
கடந்த 2014.01.01 தொடக்கம் 2014.11.17 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் 17 பேர் பலியாகியுள்ளதுடன் 104 பேர் காயம் அடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.