யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்டில் உள்ள கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் அதில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சிவபாலன் அச்சயன் (வயது-11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,
கடந்த 24ஆம் திகதி வீட்டில் கட்டப்பட்டிருந்த இரு கயிற்றைப் பிடித்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவனது தாயார் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தாயார் மதிய உணவு தயாரிப்பில் ஈடுபட்டு, சிறிது நேரத்தில் சிறுவனை அழைத்தபோது அவனது சத்தத்தைக் காணவில்லை என சிறுவன் விளையாடிய இடத்தில் சென்று தேடியுள்ளார்.
இதன்போது சிறுவனது கழுத்தில் கயிறு இறுகியிருப்பதை கண்டு பதறிய தாயார், உடனடியாக தெல்லிப்பழை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பயனின்றி சிறுவன் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் 04.08.2019