யாழ் புத்தூர் ஆவரங்காலில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ் புத்தூர் ஆவரங்காலில் முதியவரின் சடலம் மீட்பு

 யாழ்.ஆவரங்கால் சிவன் கோவில் பகுதியிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.இவர் நெல்லியடியைச் சேர்ந்த நாகமுத்து சதானந்தன் என்று அச்சுவேலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 
மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான்  முன்னிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் 
செய்திகள் தெரிவிக்கின்றன.