யாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி

யாழ்ப்பாணத்திற்கு  யூன் மாதம் யாழ் தேவி

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் அபிவிருத்திக்கான உதவித்திட்டங்களில் புகையிரதப் பாதை அமைப்பு இடம்பெற்றது. அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதை புனரமைக்கப்பட்டு தற்போது பளை வரை போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதமாக உள்ள ரயில் பாதைகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி எதிர்வரும் யூன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி வரும் என எதிர்பார்க்கின்றேன் என்றார் -