யாழ்ப்பாணம் புலோலி பகுதியில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் புலோலி பகுதியில் வாள்வெட்டு  ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் புலோலி பகுதியில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் அதே இடத்தினை சேர்ந்த நவரத்தினம் கபிலன் (வயது 29) என்பவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர்.

குறித்த நபர் மீது வாள்வெட்டினை மேற்கொண்ட இரு நபர்கள் அல்வாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பழைய பகை காரணமாக இவ் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.