யாழ்.அச்சுவேலிப் பகுதியில் கள்ளக்கரண்ட் எடுத்த நால்வா் கைது

யாழ்.அச்சுவேலிப் பகுதியில் கள்ளக்கரண்ட் எடுத்த நால்வா் கைது

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட 04 பேரை  ஞாயிற்றுக்கிழமை (05) இரவு கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (06) தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபையினரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்கள் அச்சுவேலி வடக்கு, சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, புத்தூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.