யாழ்.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறப்பு துரையப்பா அரங்கிற்கு அடிக்கல்

யாழ்.அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறப்பு துரையப்பா அரங்கிற்கு அடிக்கல்

இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது

அதன்படி இன்று முற்பகல் 11 மணிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

 யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கூட்டாக இணைந்து துரையப்பா விளையாட்டு அரங்கினை புனரமைக்க அடிக்கல்லையும் இன்றைய தினம் நாட்டவுள்ளனர்.

மேலும் பூநகரி ஆதார பிரதேச வைத்தியசாலையும் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.