யாழ். அளவெட்டியில் சூட்சுமமான முறையில் தங்க நகைகள் திருட்டு

யாழ். அளவெட்டியில் சூட்சுமமான முறையில்  தங்க நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதியில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர்.

வீட்டார் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரை மணி தொடக்கம் 5 மணிக்கு இடையியே இச்சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். அவ்வீட்டில் 15 பேர் வரை இருந்துள்ள நிலையில், அனைவரும் நன்கு உறக்கத்தில் இருந்த போதே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

வௌவேறு அறைகளில் பயணப் பைகளிலும் அலுமாரியிலும் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தையே நன்கு திட்டமிட்டு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவ்வீட்டில் முதியவர் ஒருவர் தனது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கிய சாவியை எடுத்தே பல அலுமாரிகளைத் திறந்து பணத்தையும் நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். வீட்டிற்கு தினந்தோறும் வந்து செல்லும் யாராவது இதை நன்கு அறிந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டுமென வீட்டார் சந்தேகிக்கின்றனர்.

வௌவேறு அறைகளில் வௌ;வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் என்பன ஒன்றுவிடாமல் திருடப்பட்டுள்ளதால் இந்த சந்தேகம் வீட்டாருக்கு எழுந்துள்ளது. இந்தப் பாரிய திருட்டு தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது 47 பவுண் தாலிக் கொடி, 7 பவுண் தங்கச் சங்கிலி, 8 பவுண் நெக்லெஸ், 3 1ஃ2 பவுண் காப்பு, 5 மோதிரங்கள், 6 சின்னக் காப்புகள், 6 பவுண் மணிச் சங்கிலி, 2 1ஃ2 பவுண் நெக்லஸ், 3 1ஃ2 பவுண் காப்பு என்பனவற்றுடன் வௌவேறாக வைத்திருந்த 32 ஆயிரம் ரூபா, 10 ஆயிரம் ரூபா, 7 ஆயிரம் ரூபா பணத்தையுமே திருடிச் சென்றுள்ளதாக அவ்வீட்டார் தெரிவிக்கின்றனர்.