யாழ்.ஆனைக்கோட்டைப்பகுதியில் விபத்து சிறுவா்கள் இருவா் படுகாயம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் கடும் வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இரு சிறுவா்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதி வயலுக்குள் செலுத்தி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்துள்ளனா்.

இவா்கள் இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ்.ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் நடந்த இச் சம்பவத்தில் அதேயிடத்தை சேர்ந்த வே.துவாரகன் (வயது 16) ஆர்.விவேக் (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இவா்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தவரையும் இவா்கள் இருவரையும் கட்டாக்காலியாகச் சுற்றவிட்ட பெற்றோரையும் பொலிசார் கைது செய்து கிறிமினல் வழக்குப் பதிந்து நீதிமன்றில் ஒப்படைத்து சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என இவா்களின் விபத்தை அவதானித்த பொதுமகன் ஒருவா் தெரிவித்துள்ளார்.