யாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து திருட்டு

யாழ். ஆவரங்கால் சந்தியில் கடை உடைத்து  திருட்டு

யாழ். ஆவரங்கால் சந்தியிலுள்ள கடையொன்றில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று  ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் பிற்புற ஜன்னல் ஊடாக உள்நுழைந்து அங்கிருந்த பால்மா, அரிசி, சவர்க்கார வகை, பனடோல், கற்பூரம், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

அத்துடன், உண்டியலில் சேகரிக்கப்பட்ட பணமும் உண்டியலுடன் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.