யாழ். இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் கணிதப் பிரிவில்முதலிடம்

யாழ். இந்துக் கல்லூரி மாணவன்  தேசிய ரீதியில்  கணிதப் பிரிவில்முதலிடம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்

இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன்  என்ற மாணவனே முதலிடம் பெற்றுள்ளார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

மாவட்ட நிலையில் கு.கதீஸ்(3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.