யாழ்.ஈவினைபகுதியில் பாடசாலை செல்ல தாயார் தடை. மகள் புகார்

யாழ்.ஈவினைபகுதியில் பாடசாலை செல்ல தாயார் தடை. மகள் புகார்

புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்  வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தன்னை தனது தாயார் பாடசாலைக்குச் செல்லவிடாமல் வேலைக்குச் செல்லும்படி அடித்து விரட்டுவதாக அச்சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைக்காக தாயாரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த போதும் அவர் வருகை தரவில்லை.இந்நிலையில், சிறுமி பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.