புன்னாலைக்கட்டுவன் தெற்கு, ஈவினைப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஈவினை மஸ்கன் கம்பனியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் அச்சுதன் (வயது 25) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் உள்ளவர்கள் அயலில் உள்ள ஆலயத்திற்கு சென்றிருந்தனர் எனவும் இவர் இன்று முழுவதும் கடும்யோசனையுடன் காணப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் வீட்டில் காணப்படுகின்றது. சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த இளைஞர் லீசிங்குக்கு லொறியைப் பெற்று தொழில் செய்து வந்தார் எனவும் சீரான முறையில் தொழில் கிடைக்காமையால் கஷ்டப்பட்டு வந்த நிலையில் லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.