யாழ்.உரும்பிராயில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்.உரும்பிராயில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்.உரும்பிராய் பலாலி வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு களவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உரும்பிராய் பகுதியில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருக்கும் போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தவர்கள் 16 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளும் களவாடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்று காலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்