யாழ்.ஊரெழுவில் மின்சாரம் தாக்கி இளைஞன் கருகி மரணம்

யாழ்.ஊரெழுவில் மின்சாரம் தாக்கி இளைஞன் கருகி  மரணம்

மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வர்தகர் ஒருவரின் வீடொன்றில் நேற்றிரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில் அதே இடத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் அச்சுதன் (வயது 21) என்ற உயர்தரம் கற்று வரும் இளைஞனே உயிரிழந்தவராவார்.பிரஸ்தாப இளைஞன் வீட்டில் தனித்திருந்த நிலையில் மோட்டார் நீர்ப்பம்பி அறையினுள் மின்சார தாக்குதலுக்குள்ளாகி உடல் கருகி உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.