யாழ்.ஏழாலையில் பனை வீழ்ந்து வீடு சேதம்

யாழ்.ஏழாலையில் பனை வீழ்ந்து வீடு சேதம்
ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் பனை மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லையென கிராம சேவை அதிகாரி குறிப்பிட்டார்.

பக்கத்து வளவில் சாய்ந்த நிலையில் நின்றிருந்த மேற்படி பனை மரத்தினால் தங்கள் வீட்டிற்குப் பாதிப்புள்ளதாக சேதமடைந்த வீட்டின் உரிமைளாளர் ஏற்கனவே தனக்குத் தெரிவித்திருந்ததினையடுத்து, குறித்த பனை மரத்தினைத் தறிக்கும்படி பக்கத்து வளவு உரிமையாளரிடம் எட்டு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக கிராம அலுவலர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.