யாழ்.ஏழாலை தமிழ்ப்பொதுப் பணிமன்ற தையல் கண்காட்சி ஆரம்பம்

யாழ்.ஏழாலை தமிழ்ப்பொதுப் பணிமன்ற  தையல் கண்காட்சி ஆரம்பம்

யாழ்.ஏழாலை தமிழ்ப் பொதுப் பணி மன்ற சனசமூக நிலையத்தின் தையல் கண்காட்சியை வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்றுச் சனிக்கிழமை (11.10.2014) பிற்பகல் 05 மணியளவில் ஆரம்பித்து வைத்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சுஜாதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கை செரண்டிப் சிறுவர் இல்லத் தலைவர் அ.கந்தசுவாமி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன் போது கடந்த ஆறு மாத காலத் தையல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தையல் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களின் கண்காட்சி கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. கண்காட்சியைப் பெருமளவானோர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.