யாழ்.ஏழாலை மேற்கில் அடித்து உடைக்கப்பட்ட மாத சொரூபம்

 யாழ்.ஏழாலை மேற்கில் அடித்து உடைக்கப்பட்ட மாத சொரூபம்

யாழ்.ஏழாலை மேற்கில் வழிபாட்டுக்கு என வைக்கப்பட்டிருந்த மாத சொரூபம் இனந்தெரியாத நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.

 

ஏழாலை மேற்கு மயில்வாகனம் கடையடியில் வீட்டு மதில் சுவருடன் வழிபாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதா சொரூபத்தை சமய வேறுபாடுகள் இன்றி மக்கள் நாளாந்தம் வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.