ஏழாலை முருகன் வித்தியாசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை

ஏழாலை முருகன் வித்தியாசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் கடந்த பல மாதங்களாக ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நீடிப்பதாக வித்தியாசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

தரம் 01 தொடக்கம் ஐந்து வரையுள்ள மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் தேவையாகவிருந்த போதும் தற்போது 04 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர்.

இந்த ஆண்டில் சில ஆசிரியர்கள் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே குறித்த வெற்றிடம் நிலவுவதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியர் வெற்றிடத்துக்கு கடந்த பல மாதங்களாக ஆசிரியர் நியமிக்கப்படாத காரணத்தால் தமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.