யாழ்.கல்வியங்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழ்.கல்வியங்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

 
இன்று பி.ப 1.30 மணியளவில் கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள்தீப்பிடித்து எரிந்து சேதங்களுக்குள்ளாகியது.இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.எனினும் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் தண்ணீர்,மணல் கொண்டு 
அணைத்தனர்.
 
.