யாழ். குடாநாட்டில் இன்று கடும் மழை

யாழ். குடாநாட்டில் இன்று கடும் மழை

யாழ். குடாநாட்டில் இன்று புதன்கிழமை (04.02.2015) காலை 07 மணியிலிருந்து ஆரம்பித்த கடும் மழை பிற்பகல் 02 மணி வரை நீடித்தது.

இதனால் தோட்டங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் மழை வெள்ளம் தேங்கிக் காணப்பட்டது.

கடந்த பல நாட்களாக வெயிலுடனான காலநிலை நீடித்த நிலையில் இன்றைய தினம் திடீரென மழை பெய்துள்ளது.

தற்போதும் மப்பும் மந்தராமுமான காலநிலையே நீடிக்கிறது.