யாழ் குடாவில் அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளிகள்.13 போ் பாதிப்பு

யாழ் குடாவில் அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளிகள்.13 போ் பாதிப்பு

இந்த வருடத்தில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவா்களின் இருவா் தாமதமாகச் சிகிச்சைக்கு வந்ததால் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனாவைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனா். 

எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவா்களில் 3 போ் குழந்தைகள் எனவும் மற்றையவா்களில் பெரும்பாலோனோர் பதின்மவயதுப் பெண்கள் எனவும் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதின்ம வயதுப் பெண்கள் காதல் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டு எயிட்ஸ் நோக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை  யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது யாழ் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான எயிஸ்ட் நோய் தொற்றுக்குள்ளானவா்கள் உலாவிவருவதாகவும் அவா்களுக்கே தெரியாது அவா்களிடம் எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுவரை 70 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயாளா்களாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் அவா்களுடன் பாலியலுறவு கொண்டவா்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெருமளவு எயிட்ஸ் நோயாளா்கள் இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.