யாழ்.குடாவில் இரண்டு நாட்களாகக் கடும் மழை

யாழ்.குடாவில்  இரண்டு நாட்களாகக் கடும் மழை

யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் மழை பெய்த நிலையில் இன்று வியாழக்கிழமையும்(20.11.2014) மாலை 05 மணி முதல் இடையிடையே கடும் மழை பொழிவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 04.30 மணிக்கு ஆரம்பமாகிய மழை வீழ்ச்சி இரவு வரை தொடர்ந்தது. கடும் மழை காரணமாக யாழ்.குடாநாட்டின் முக்கிய வீதிகள் உட்படப் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை,சீரற்ற கால நிலை,கடற் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியைக் கடந்த இரு நாட்களாகத் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீன்களின் விலை தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது