யாழ். குப்பிளான் வறிய மாணவர்களுக்குச் சைக்கிள்கள்

யாழ். குப்பிளான் வறிய மாணவர்களுக்குச் சைக்கிள்கள்

யாழ். குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத் திறப்பு விழா அண்மையில் இடம்பெற்ற போது குப்பிளானைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

குப்பிளானைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளான இராமநாதன் மோகன், பொன்னம்பலம் ஜெகநாதன் ஆகியோரால் இதற்கான நன்கொடை நிதியுதவி
வழங்கப்பட்டுள்ளது.

குப்பிளானைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்குட்பட்ட நான்கு மாணவர்கள் தெரிவு
செய்யப்பட்டு தலா 15 ஆயிரம் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் பிரதம
விருந்தினர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், கௌரவ விருந்தினர்கள்
குப்பிளான் வடக்கு கிராம சேவகர் சோ.பரமநாதன், குப்பிளான் தெற்குக் கிராம
சேவகர் பே.மயூரதன், சமூக சேவையாளர் நா.கணேசலிங்கம் ஆகியோரால்
மேடையில் வைத்து உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சைக்கிள் திருத்த வேலைகளுக்காக தலா ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

குறித்த மாணவர்கள் நால்வரும் வறுமை காரணமாக சைக்கிள் வாங்க முடியாத
நிலையில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதில் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கினர்.

இந் நிலையில் தமக்குச் சைக்கிள் கிடைத்தது தொடர்பில் இந்தச் சிறு உள்ளங்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

புலம்பெயர் உறவுகளின் இவ்வாறான முன்னுதாரணமான செயற்பாட்டை ஊரவர்களில் பலரும் மனம் திறந்து பாராட்டினர்.

தொடர்ந்தும் எமது புலம்பெயர் உறவுகள் தமது பகுதிகளிலுள்ள கஸ்டப் பிரதேச மக்களுக்கு முன்வந்து உதவ வேண்டும்.

அழிவின் விளிம்பிலிருந்து எமது சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்ப நாமனைவரும் இன்றே உறுதிபூணுவோம்

 

                      .