யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.


தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத் திருவிழாவில் எதிர்வரும்-29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-05 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு -07.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 01 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகல்-12 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.


இவ்வாலய விசேட உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய திருவிழாக்கள் தினசரி காலை-08.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல்-11.15 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பிற்பகல்- 12.30 மணியளவில் சுவாமி உலாவருதலுடன் நிறைவு பெறும்.  மாலை உற்சவம் மாலை-05.30 மணியளவில் பூசையுடன் ஆரம்பமாகும்.

இவ்வாலய மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு மகேஸ்வர பூஜை(அன்னதானம்) வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை, ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலயச் சுழல விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


டன் தமிழ் ஒளியில்  சிறுப்பிட்டி  கலைஞன் சத்தியதாஸின்   நேர்கானல் 

ஆன்மீக செய்திகள் 21.06.2019