யாழ். கொக்குவில் சந்திக்கு அருகில் ரவுடிகளின் அட்டகாசம்

 யாழ். கொக்குவில் சந்திக்கு அருகில் ரவுடிகளின் அட்டகாசம்

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள கோவில் சுற்றுவட்டாரத்திர் மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை கூடும் ரவுடிக் கூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன .

அப்பகுதியால் போவோர் வருவோரிடம் இவர்கள் சேஷ்'டைகள் புரிவதாகவும் பொதுமக்களின் வீடுகளுக்கு அருகிலும் கோவில்,, மற்றும் பாடசாலைக்கு அருகிலும் இவர்கள் மது அருந்தி விட்டு போத்தல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலைக்கு முன் உள்ள ஒழுங்கையில் மலசலம் கூட இவர்கள் கழித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.