யாழ்.கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்பாள் ஆலயக் கொடியேற்ற உற்சவம்

யாழ்.கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்பாள் ஆலயக் கொடியேற்ற உற்சவம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஸ்ரீ.சிவகாமி அம்பாள் ஆலய வைகாசி மாத மகோற்சவப் பெருவிழா நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகியது.

மகோற்சவப் பிரதம குரு பிரம்மஸ்ரீ நா.திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக் கொடியேற்ற உற்சவத்தில் பெருமளவான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்பாள் திருவீதியுலா வரும் அழகுக் காட்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மகோற்சவத்தில் நாளை 03 ஆம் திகதி இரவு 07 மணிக்கு அன்னச் சப்பற உற்சவமும், 05 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 07 மணிக்கு பூச்சப்பறமும், 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 07 மணிக்கு வசந்தோற்சவமும்,07 ஆம் திகதி இரவு 07 மணிக்கு கைலாச வாகனமும்,10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02 மணிக்கு
வேட்டைத் திருவிழாவும் இரவு 07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 11 ஆம் திகதி புதன்கிழமைநண்பகல் 12 மணிக்கு இரதோற்சவமும் இடம்பெறும்.