கோப்பாயில் நீரிறைக்கும் இயந்திரத்தை திருடியவரை மடக்கிய பொதுமக்கள்

கோப்பாயில் நீரிறைக்கும் இயந்திரத்தை திருடியவரை மடக்கிய பொதுமக்கள்

யாழ்.கோப்பாய்ப் பிரதேசத்தில் வீடொன்றில் நீரிறைக்கும் இயந்திரத்தைக் களவாட முற்பட்ட சந்தேகநபர்கள் மூவரில் ஒருவர் அப்பகுதிப் பொதுமக்களால் நேற்றுப் புதன்கிழமை (18.02.2015) மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கோப்பாய்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றுக் காலை நீரிறைக்கும் இயந்திரத்தைக் களவாடுவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவொன்று வந்துள்ளது.

அதனைக் கண்ட வீட்டு உரிமையாளர் உரத்துக் கூச்சலிடவே திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் அயலவர்கள் ஒன்று கூடி மூவரையும் துரத்திய போதிலும் ஒருவரை மாத்திரமே மடக்கிப் பிடித்தனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய்ப் பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளரால் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டார்.

பிடிபட்ட திருட்டுச் சந்தேகநபரிடம் கோப்பாய்ப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,அண்மைக் காலமாகக் கோப்பாய்ப் பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகப் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.